பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு, புதிய தயாரிப்புகள் மற்றும் உற்பத்தி விரிவாக்கத்தில் கவனம் செலுத்தி வரும் மில்கி மிஸ்ட் நிறுவனத்துக்கு தற்போது தரக் கட்டுப்பாடு தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன. நிறுவனத்தின் பன்னீரில் கொழுப்புச்சத்து குறைவாக இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அதன் உற்பத்தி ஆலையில் ஆய்வு நடத்த இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புகார்கள் […]