fbpx

திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம், உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை கேட்டு வேதனை அடைந்தேன்.

திமுக-வில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து கழகப் பணியையும், மக்கள் …

2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திமுகவின் கட்டமைப்பை வலுப்படுத்த முதல்வர் முக.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக ’தி ஹிந்து’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 17-வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஜூன் 16ஆம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி 18-வது மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை கடந்த மார்ச் 16ஆம் தேதி இந்திய தேர்தல்

திமுகவின் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகத்துக்கு மிகுந்த ஆபத்தானது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்பவர், வாக்குப் பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தேர்தலில், தங்கள் …

ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும். இல்லையெனில் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; ஜூன் 9-ம் தேதி திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பேசிய …

பால சாகித்ய புரஸ்கார், யுவ சாகித்ய புரஸ்கார் விருது வென்ற எழுத்தாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் ‌.

இது குறித்து தமிழக முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; நம் வரலாற்றின் வேர்களை இளையோர் அறிய, கீழடியைத் தன் கதைக்களமாய்க் கொண்டு ஆதனின் பொம்மையை உருவாக்கி, அதற்கு அங்கீகாரமாக பால சாகித்ய புரஸ்கார் …

ஆவின் நிறுவனத்தில், சிறார்களை பணியமர்த்தியது தொடர்பாக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்; ஆவின் நிறுவனத்தில், சிறார்களை பணியமர்த்தியதாக செய்திகள் வெளியானதும், ஆரம்பம் முதல் அதனை மழுப்பி மறைக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறார் தமிழக பால்வளத்துறை அமைச்சர். அரசு …

அண்ணா அறிவாலயத்தில் வரும் 20- ம்‌ தேதி திமுக தலைவர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ திமுக உயர்நிலை செயல்‌ திட்டக்‌ குழு கூட்டம்‌ நடைபெறும்‌ என பொதுச்செயலாளர்‌ துரைமுருகன்‌ அறிவித்துள்ளார்‌.

இது குறித்து அவர்‌ வெளியிட்ட அறிக்கையில்; திமுக தலைவர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ திமுக உயர்நிலை செயல்‌ திட்டக்‌ குழுக்‌கூட்டம்‌ வருகின்ற 20.5.2023 தேதியன்று சனிக்கிழமை காலை …

முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவைக்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது.

முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவைக்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது. மாலை 5 மணியளவில்‌ நடைபெறும்‌ அமைச்சரவைக்‌ கூட்டத்தில்‌, பட்ஜெட்‌ கூட்டத்தொடரில்‌ அறிவிக்கப்பட்ட திட்டங்கள்‌, துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள்‌ மற்றும்‌ அவற்றை செயல்படுத்தும்‌ நடைமுறைகள்‌ …

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார்.

கருணாநிதி நூற்றாண்டையொட்டி, 1,000 படுக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் சென்னையில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக சென்னை …

முத்திரைத்தாள் விலை உயர்வை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்; மக்களின்‌ வாழ்வாதாரம்‌ முன்னேற வழிவகை செய்யாத திறனற்ற திமுக அரசு விலையேற்றம்‌ ஒன்றை மட்டுமே பரிசாக வழங்கி வருகிறது.திறனற்ற திமுக, ஆட்சிக்கு வந்த நாள்‌ முதல்‌ தொடர்ச்சியாக …