பேரிடர் காலங்களில் ஈடுபடும் பணியாளர்கள் தங்குவதற்கு உரிய பள்ளிகள்,திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் அடையாளம் காணப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர்; தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 01.04.2025 முதல் 18.10.2025 வரைமொத்தமாக 11,87,000 சிறப்பு பராமரிப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் கம்பங்கள் 34,401 […]

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தலைநகர் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் எனவும், தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் இந்தியா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று வடகிழக்கு […]

தமிழகத்தில் 26 இடங்களில் மகளிருக்கான ‘தோழி’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தமிழகத்தில் மகளிருக்கான 6 புதிய ‘தோழி’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் உள்ள 10 தங்கும் விடுதிகள் சீரமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, ஆதிதிராவிடர் நலத்துறையில் இருந்து பெறப்பட்ட 3 மகளிர் தங்கும் விடுதிகளும் சீரமைக்கப்பட்டு செயல்படுகின்றன. தற்போது மொத்தம் 19 விடுதிகள் […]

முதல்வர் மு.க. ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து கூற வேண்டும் என சட்டப்பேரவையில் கேட்டால், சபாநாயகர் அப்பாவு ஏன் பதறுகிறார் என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதல்வர் என்பவர் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானவர். தன்னை நாத்திகர் என்று கூறிக் கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து மத […]

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் குறித்து உறுதியளிக்கவில்லை என ஃபாக்ஸ்கான் மறுப்பு தெரிவித்துள்ளது. அரை நாளில் திமுக அரசின் புளுகு அம்பலமானது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் ரூ.15 ஆயிரம் கோடி புதிய முதலீடுகளைச் செய்ய தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்திருப்பதாகவும், அதன் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தமிழக அரசு பெருமை பேசிக் கொண்டிருந்த நிலையில், […]

அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது” என்று அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே உள்ள தாமலேரி முத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக நேற்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்ட சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை […]

திருநங்கையர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக  சென்னை மற்றும் மதுரையில் ரூ.43.88 இலட்சம் செலவில் “அரண்” திருநங்கையர்களுக்கான இல்லங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சமூகத்தில் திருநங்கையர்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்குடன், மரபு சார்ந்த “அரவாணிகள்” என்ற சொல்லுக்கு மாற்றாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் “திருநங்கை” என்ற மரியாதைக்குரிய சொல் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. திருநங்கைகளுக்கும் முழுமையான சமூகப் பாதுகாப்பையும் அங்கீகாரத்தையும் வழங்கி, அவர்களின் உழைப்பையும் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் விதமாக, […]