விநாயகர் சதுர்த்தி பண்டிகை என்றாலே விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை நினைவுக்கு வருவது வழக்கம். வீடுகளில் பல்வேறு சுவைகளில் கொழுக்கட்டை தயாரித்து விநாயகருக்குப் படையலிட்டு, பின்னர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வது இந்த பண்டிகையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக உள்ளது. இந்த ஆண்டு வழக்கமான கொழுக்கட்டைகளைத் தாண்டி, தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை ஒன்று சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள […]

