கலியுக வரதனும் கண்கண்ட தெய்வமுமான கந்தனுக்குரிய விரதங்களில் மிகச் சிறந்த விரதம் கந்த சஷ்டி விரதம் ஆகும். மாதந்தோறும் வரும் வளர்பிறை, தேய்பிறை பட்சங்களில் இரண்டு சஷ்டி திதிகள் வந்தாலும் ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே கந்த சஷ்டி என போற்றப்படுகிறது. இதனை மகா சஷ்டி என்றும் குறிப்பிடுவதுண்டு. ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பிரதமை திதியில் துவங்கி, சப்தமி வரையிலான 7 நாட்கள் சஷ்டி […]

ராமநாதபுரம் மாவட்டத்தின் குண்டுக்கரை என்ற சிறிய ஊரில்தான், உலகில் வேறெங்கும் இல்லாத அதிசய வடிவில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். “சுவாமிநாத சுவாமி” என அழைக்கப்படும் இக்கோவிலில், 11 திருமுகங்களும், 22 திருக்கரங்களும் கொண்ட முருகன் சிலை உள்ளது. பொதுவாக பெரும்பாலான முருகன் கோயில்களில், ஒரு முகத்துடன் காணப்படும் முருகப்பெருமான், சில இடங்களில் இரண்டு அல்லது மூன்று முகங்களுடன் அருள் தருகிறார். ஆனால் இங்கே குண்டுக்கரையில், 11 முகங்களோடும், 22 கரங்களோடும் […]