fbpx

திருமணம் செய்வதாக கூறி தன்னை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்ததை தொடர்ந்து, சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முதற்கட்டமாக இன்று (பிப்.27) சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டும், அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், நாளை காலை 11 மணியளவில் …

சீமானுக்கு எதிரான பிடிவாரண்டை திரும்பப் பெற கோரி விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மறைந்த …

அண்மையில் கடலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், ‘தமிழ் ஒரு சனியன்’ என பெரியார் பேசியதாக தெரிவித்திருந்தார். மேலும் ‘பெரியாருக்கும் சீர்திருந்திற்கும் என்ன சம்பந்தம்’ என பேசியிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

சீமானின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் …

அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு காலை உணவு திட்டத்தை நடத்தி வரும் நிலையில், வாரத்தில் ஏழு நாட்களில் 5 நாட்களில் உப்புமா போடுகிறார்கள். இது என்ன காலை உணவு திட்டமா அல்லது உப்புமா கம்பெனி திட்டமா என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘திராவிட …

மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 12-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, அரசியலமைப்பு 129-ஆவது சட்ட திருத்தம் உட்பட 2 மசோதாக்களை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே அறிமுகம் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டது.

வருகிற 20-ஆம் …