நாட்டில் சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைக் குறைத்து உயிர்களைக் காப்பாற்றும் நோக்கில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. பில்ட்-ஆபரேட்-டிரான்ஸ்ஃபர் (பிஓடி) மாதிரியின் கீழ் கட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் புதிய விதிகளை அமல்படுத்த உள்ளதாக அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த விதிகளின்படி, நெடுஞ்சாலையின் எந்தவொரு பிரிவிலும் ஒரு வருடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டால், அந்தத் திட்டத்தின் கட்டுமானத்திற்குப் பொறுப்பான ஒப்பந்ததாரர்கள் நேரடியாகப் பொறுப்பாவார்கள். […]

நீங்கள் ஒரு காரில் அல்லது இரு சக்கர வாகனத்தில் நெடுஞ்சாலையில் பயணித்தால், நீங்கள் பெரும்பாலும் வழியில் பல சுங்கச்சாவடிகளைக் கடக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும், வாகன ஓட்டுநர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை சுங்கக்கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் சுங்க வரி என்று அழைக்கப்படுகிறது. இது பயணிகளுக்கு ஒரு சிறிய சுமையாகத் தோன்றலாம், ஆனால் இது நாட்டில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. சுங்க வரி […]

தேசிய நெடுஞ்சாலைகள் ஆண்டுதோறும் 50,000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கின்றனர், 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சராசரியாக தினமும் 147 பேர் இறக்கின்றனர் என்று புள்ளிவிவரங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை தேசிய நெடுஞ்சாலைகளில் 26,770 பேர் இறந்துள்ளனர் என்பதை மின்னணு விரிவான […]

சுங்கக் கட்டணத்தை பாதியாக குறைக்க சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய நேடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு சுங்கக்கட்டணம் பெரும் தலைவலியாக உள்ளது. நீண்ட தூர பயணங்களில் ஒவ்வொரு சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.. அவ்வப்போது அரசு இந்த சுங்கக்கட்டணங்களை உயர்த்தி வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.. இந்த நிலையில் வாகன ஓட்டிகளுக்கு ஒரு குட்நியூஸ் வந்துள்ளது.. சுங்கக் கட்டணத்திலிருந்து நிவாரணம் அளிக்க […]