டைமண்ட் லீக் இறுதிப்போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், 85.01 மீ., தூரம் ஈட்டி எறிந்து இந்தியா வீரர் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்தார். ஜெர்மனியின் வெப்பர், 90.51 மீ., எறிந்து அபார சாதனையுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தின் சூரிச் நகரில் டைமண்ட் லீக்கின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ஜெர்மனி வீரர் ஜூலியன் வெப்பர், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, ட்ரினிடாட் & டொபாகோ வீரர் கெஷோர் வால்கட், கிரெனடாவின் […]