சாதி அடையாளங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; மாணவர்கள் அனைவரும் அரசால் தெரிவிக்கப்பட்ட சீருடையையே அணிந்து வர வேண்டும். மாணவர்கள் முக்கால் அளவுள்ள மற்றும் இறுக்கமான கால்சட்டையை அணிந்து வரக்கூடாது. அரைக்கை சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும். சட்டை மிகவும் இறுக்கமாக இருக்க கூடாது. கைப்பகுதி முழங்கை அளவுக்கு […]

திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (42). ஆட்டோ டிரைவரான இவருக்கு முத்துலட்சுமி (34) என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள். பாலசுப்பிரமணியனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தன் கணவருடன் ஏற்பட்ட தகறாரில் முத்துலட்சுமி தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் இருவரையும் அழைத்து மகளிர் […]

தமிழில் இருந்து வந்ததுதான் கன்னடம் என நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இல்லை என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.  ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது’ என்று கூறி இருந்தார். கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பல்வேறு […]