fbpx

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை. அதிகனமழை, வெள்ளம் எதிரொலியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பொழிவு இருந்து வருகிறது. இன்று ஒரு சில இடங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று நெல்லை , தூத்துக்குடி ஆகிய …

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால், வனப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவி மற்றும் சொரிமுத்தையனார் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி மாஞ்சோலை பகுதியில் உள்ள நாலுமுக்கு எஸ்டேட்டில் …

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று …

திருநெல்வேலி மாவட்டத்தில், காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் மனைவி, தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டதால், கதறும் காதல் கணவர்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த சரவணகுமார், அமுதா தம்பதியினர் வெகு நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர், இருவரும் திருமணம் செய்து கொண்டு, ஒன்றாக வசித்து வந்தனர்.

என்னதான் காதலித்தவரின் கையைப் …

திருநெல்வேலி அருகே, அரசு நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்றிருந்த சபாநாயகர் அப்பாவு மற்றும் மாவட்ட ஆட்சியர் கண்முன்னே கந்து வெட்டி கொடுமை காரணமாக, பெண் ஒருவர், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில், மாவட்ட வேளாண் பொறியியல் துறையின் சார்பாக, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி …

திருநெல்வேலி அருகே, பாஜகவை சார்ந்த பிரமுகர் ஒருவர், வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, மூளிகுளத்தை சேர்ந்தவர் ஜெகன்(34). இவர் திருநெல்வேலி மாவட்ட பாஜகவின் இளைஞர் அணி செயலாளராக இருந்து வருகின்றார். இவர் நேற்று இரவு மூளிக்குளம் கடைவீதியில் தன்னுடைய நண்பர்களுடன் உரையாடிவிட்டு, வீட்டுக்கு சென்றார். அப்போது இரு …

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு, சிறைக்கு சென்று, சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்த ஒருவரை, ஒரு கூலிப்படை கும்பல் ஓட, ஓட வெட்டி படுகொலை செய்த சம்பவம் சேரன்மகாதேவியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேரன்மகாதேவி பகுதியில் வசித்து வரும் கணேசனுக்கு, மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருக்கின்றனர். மேலும், அவர் சென்னையில் ஓட்டுனராக …

சென்ற சில தினங்களுக்கு முன்னர், நாங்குநேரி பகுதியில், ஒரு மாணவர் சாதி ரீதியாக ஏற்பட்ட வன்மத்தால், கொடூரமாக தாக்கப்பட்டார் என்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அவர் மருத்துவமனையில் இருக்கிறார்.

நெல்லை மாவட்டம் பகுதியில், இருக்கின்ற நாங்குநேரி கிராமத்தில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவனை ஜாதி வெறியின் காரணமாக, சக மாணவர்களே அரிவாளால் வெட்டிய …

பெண் வீட்டில் தன்னை பற்றி தவறாக சொல்லிய நபரை நடு ரோட்டில் நண்பர்களுடன் சேர்ந்து, ஓட, ஓட விரட்டி, வெட்டி படுகொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் திருநெல்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கார்த்திக் என்ற இளைஞருக்கு பெண் பார்ப்பதற்காக சென்று உள்ளனர். அப்போது, பெண் வீட்டாரிடம், திருநெல்வேலி மாவட்டம், …

மாநில அரசு ஒருபுறம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது என்று தெரிவித்து வந்தாலும், மறுபுறம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணம் தான் இருக்கிறது. இதனை தடுப்பதற்கு மாநில அரசும், காவல்துறையும் முயற்சி செய்கிறதா? அல்லது வெறுமனே அறிக்கைகள் மட்டும் விட்டுக் கொண்டிருக்கிறதா? என்ற சந்தேகம் மிகவும் வலுவாகவே எழுகிறது.…