இந்தியாவில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தற்போது புழக்கத்தில் உள்ள புதிய மாறுபாடுகளால் கடுமையான அச்சுறுத்தல்கள் இல்லை என்று முன்னணி இந்திய பயாலஜிஸ்ட் டாக்டர் வினீதா பால் தெரிவித்துள்ளார்.

ஹாங்காங், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை 1000 பேருக்கு மேல் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் புதிய திரிபுகளான NB.1.8.1 மற்றும் LF.7 தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு இந்த வகை கொரோனா காரணமாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு வகை தொற்றுகளும் […]