ரயில் நிலைய கவுன்ட்டரில் டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கும் ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற பயணக் காப்பீட்டுப் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாக உள்ளது. இதற்காக, வரும் அக்டோபர் 27ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் இந்த வசதியை அமல்படுத்த ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறையைச் செயல்படுத்தத் தவறினால் ரயில்வே வாரியமே பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். நேரடியாக டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கும் காப்பீடு வழங்குவது […]