பி.எட். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இந்த ஆண்டு முதல்முறையாக இணைய வழியில் நடத்தப்படும். வெளியூர் மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையில், முதல்வர் அறிவுறுத்தலின் படி, இந்த ஆண்டு பி.எட். சேர்க்கைக்கான கலந்தாய்வை இணைய வழியில் நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 9-ம் தேதி மாலை 5 மணி வரை இணைய வழியில் கலந்தாய்வு நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; கடந்த ஆண்டுகளில் பி.எட். […]
online
தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக ஆகஸ்ட் 3, 4 ஆகிய நாட்களில் சென்னை பொது அஞ்சலகம் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் சென்னை பொது அஞ்சலகத்தில் புதிதாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில் நுட்ப மென்பொருள் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கொள்கையின்படி, நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். இந்த மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவையை, தடையற்ற, பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவதற்கு ஏதுவாக […]
நிலங்களின் பட்டா விவரங்களை செல்போனிலேயே அறிய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனை அரிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்ல வேண்டும். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என டைப் செய்தால் போதும். உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறிந்து கொள்ளலாம். பட்டா உரிமையாளர் விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். தமிழகத்தில் ஒரு நிலத்தின் சர்வே எண், […]
விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை நல்ல விலைக்கு விற்பனை செய்ய சிறப்பு வசதியாக இணையதளம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விவசாயிகள் நலன் கருதி அவர்களது வருவாய் பெருக்கும் விதமாக தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை நல்ல விலைக்கு உரிய நேரத்தில் விற்பனை செய்ய சிறப்பு வசதியாக இணையத்தளம் உருவாக்கப்படும். இந்த இணையத்தளம் மூலம் கால்நடைகளில் சந்தை விலை நிலவரம் பல்வேறு சந்தைகளில் இருப்பு நிலவரம். உள்ளிட்டவை கால்நடை விவசாயிகளால் […]
முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உமங் செயலி மூலம் யு.ஏ.என். எண் ஒதுக்கீடு உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகிறது என ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் சேவைகளை விரைவாகவும், வெளிப்படையாகவும், பயனர்கள் பயன்படுத்த எளிதானதாகவும் மாற்றுவதற்கு தொடர்ச்சியான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள், அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பான, திறமையான சேவைகளை வழங்குவதற்கான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும். அண்மைக் காலங்களில் […]
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில்; அனைத்து விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான அனுமதி விண்ணப்பங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே சமர்ப்பிப்பதற்கான நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல், தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்தல், ஆன்லைனில் கட்டணம் செலுத்தல், விண்ணப்ப நிலையை […]