கோவை மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியாக இருப்பதால், […]

கோவை, நீலகிரிக்கு இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கடந்த சில தினங்களாகவே நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை கனமழை பெய்தது. அதன் பிறகு வானிலை அடியோடு மாறியது போல, மழை பெய்த பகுதிகளில் எல்லாம் வெயில் கொளுத்தியது. குறிப்பாக சென்னை, […]

நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் […]

இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், நாளை கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வடக்கு ஆந்திரா–தெற்கு ஒடிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் […]