சமூக ஊடகங்கள் முதல் ஓடிடி தளங்கள் வரை, வலைத்தளங்களில் ஆபாசம், தவறான தகவல் மற்றும் இணையவழிக் குற்றங்களைக் கட்டுப்படுத்த ஏதுவாக கடுமையான விதிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட வலைதளப் பயனர்களுக்கு வெளிப்படையான, பாதுகாப்பான, நம்பகதன்மையுடன் கூடிய சமூகப் பொறுப்பு மிக்க ஊடக செயல்பாடுகளை உறுதி செய்யும் வகையில் அரசின் கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள வலைத்தளங்கள் எந்தவொரு சட்டவிரோத நிகழ்ச்சிகள் அல்லது தகவல்களை ஒளிபரப்புவதிலிருந்து, குறிப்பாக […]

வயதுக்கு மீறிய உள்ளடக்கத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க ஓடிடி தளங்களில் வலுவான பாதுகாப்பு அம்சங்களை கட்டாயப்படுத்துகிறது மத்திய அரசு. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் கீழ், தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021-ன் பகுதி-III, ஓடிடி தளங்களில் உள்ளடக்கத்தை வெளியிடுபவர்களுக்கான நெறிமுறை குறியீடுகளை வழங்குகிறது. இதன்படி, சட்டத்தால் தடைசெய்யப்பட்ட எந்தவொரு உள்ளடக்கமும் வெளியிடப்படக் கூடாது. மேலும் வயது அடிப்படையிலான உள்ளடக்கம் 5 வகைகளாகப் […]