fbpx

ஓடும் ரயிலில் இருந்து பயணி ஒருவர் வீசிய தண்ணீர் பாட்டில் தாக்கி 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளை வெளியே எறிவது, பலரும் சாதாரணமாகச் செய்யும் ஒரு விஷயம்.. அப்படி ஒரு விஷயம் ராஜ்கோட்டில் சோகமாக மாறியது. குஜராத்தில் ஓடும் ரெயிலில் இருந்து பயணி ஒருவர் …

Norovirus: வடக்கு ஐரோப்பிய பயணத்தின் போது P&O Iona கப்பலில் பயணிகளிடையே நோரோ வைரஸ் பரவியதால் திடீரென ஈக்கள் போல சுருண்டு விழுகின்றனர்.

5,000 விருந்தினர்கள் மற்றும் 1,800 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு P&O Iona என்ற க் கப்பல் ஏழு நாள் வடக்கு ஐரோப்பிய பயணமாக பெல்ஜியம் வழியாகப் பயணிக்கிறது. இந்தநிலையில், பயணிகள் நோரோ வைரஸ் …

திருமலா விரைவு ரயிலில் கழிப்பறை வசதி சரியில்லாத காரணத்தால் ஒரு பயணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்குமாறு தென் மத்திய ரயில்வேக்கு விசாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ரயிலில் அசுத்தமான கழிவறை விவகாரம் தொடர்பாக பயணிக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க விசாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திரம் மாநிலம் விசாகப்பட்டினம் …

விமான பயணங்களின் போது பல்வேறு காரணங்களால் விமான பயணிகள் மற்றும் அதில் பணியாற்றுபவர்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் மெக்சிகோ நாட்டிலிருந்து கனடா நாட்டிற்கு பயணம் செய்ய இருந்த பெண் பயணி விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மெக்சிகோ நாட்டிலிருந்து கனடா நாட்டிற்குச் செல்ல இருந்த வெஸ்ட் ஜெட் விமானத்தில் ஜோனா சியு …

சென்னை நகர பேருந்தில் பின்பக்க இருக்கைக்கு கீழிருந்த பலகை உடைந்ததால் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் நோக்கிச் சென்ற பேருந்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் சென்ற பேருந்து என்.எஸ்.கே நகர் சிக்னல் அருகே …

விரைவு ரயில்களின் AC பெட்டிகளில் இருக்கையில் அமர்ந்து செல்லும் RAC பயணிகளுக்கும் போர்வை, படுக்கை விரிப்பு, கம்பளி ஆகியவை வழங்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே வாரியம் அனைத்து மண்டலங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; விரைவு, அதிவிரைவு ரயில் உள்பட அனைத்து விரைவு ரயில்களின் AC பெட்டிகளில் இருக்கை வசதி பெற்று …

மழைக்காலங்களில் பேருந்தில் மழை நீர் கசிவது தொடர்பாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால் விமானத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ விமானங்களின் தரம் குறித்து மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

இங்கிலாந்து தலைநகரான லண்டனில் இருந்து பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்டர் நகருக்கு பயணம் மேற்கொண்ட ஏர் …

அரசு விரைவுப்‌ போக்குவரத்துக்‌ கழக பேருந்துகளின்‌ சுமை பெட்டி வாடகை திட்டம்‌ இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

அரசு போக்குவரத்துக்‌ கழகங்களின்‌ வருவாயை பெருக்கும்‌ நோக்கத்தோடு பேருந்துகளில்‌ உள்ள உபயோகப்படுத்தப்‌ படாத சுமை பெட்டிகளை மாத வாடகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை, கடந்த 05.05.2022 அன்று போக்குவரத்து துறை மானியக்‌ கோரிக்கையின்‌ போது …