மங்களகரமான தினங்களான ஜூலை 14, 16 தேதிகளில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோடக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; சுப முகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், அன்று பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். தற்போது ஆனி மாதத்தில் வரும் மங்களகரமான நாட்களான ஜூலை 14 மற்றும் 16 -ம் […]

மனை பிரிவுகளில் உள்ள பொது ஒதுக்கீடுகளாக உத்தேசிக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா, திருமண மண்டபம் சமுதாய நலக்கூடம், சிறுவர் பள்ளி போன்ற பயன்பாட்டிற்கு மட்டுமே ஒதுக்க வேண்டும். மாறாக வேறு எவ்வித பயன்பாட்டிற்கும் பயன்படுத்தக் கூடாது இன்று நகர் ஊரமைப்பு இயக்கம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஊரமைப்பு இயக்கம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; விரிவான அபிவிருத்தி திட்டங்கள் (Detailed Development Plan) தயாரிக்கப்படும்போது ஒப்புதலளிக்கப்பட்ட மனைப்பிரிவுகளிலுள்ள பொது ஒதுக்கீடுகள், விரிவான அபிவிருத்தி […]

பொதுமக்களின் வசதிக்காக, பத்திரப்பதிவு துறையானது, பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் செய்து வருகிறது… குறிப்பாக, தமிழகத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன்மயமாகிவிட்டதால், பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை. நாளுக்கு நாள், பொதுமக்களின் நன்மைக்காகவே அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்துவரும் நிலையில், அடுத்த அதிரடியை கிளப்பிவிட்டுள்ளது. காரணம், தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையால் வழங்கப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலர் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.. […]

சேலம் மாவட்டத்தில் நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொது மக்கள் இ-சேவை மையம் மற்றும் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நத்தம் இணைவழி பட்டா மாறுதல் திட்டம் 04.03.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் சேலம், சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வாழப்பாடி, ஏற்காடு, மேட்டூர், ஓமலூர், காடையாம்பட்டி, சங்ககிரி, எடப்பாடி, […]

தமிழகத்தில் அனுமதி அற்ற மனை பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள் இன்று முதல் விண்ணப்பித்து வரன்முறை செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025-2026-ஆண்டிற்கான சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின் போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும்” என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, […]

நிலங்களின் பட்டா விவரங்களை செல்போனிலேயே அறிய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனை அரிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்ல வேண்டும். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என டைப் செய்தால் போதும். உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறிந்து கொள்ளலாம். பட்டா உரிமையாளர் விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். தமிழகத்தில் ஒரு நிலத்தின் சர்வே எண், […]

விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு அதற்கான விற்பனைப்பத்திரம் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள 03.11.2017 வரை ஆறு மாத […]

நிலம், வீடு அல்லது வீட்டு மனை வாங்கும் போது பத்திரப்பதிவில் பொதுவாக மக்களிடையே இருக்கும் கவனத்தை விட, பட்டா பெறும் நடவடிக்கையில் இன்னும் அதிக கவனம் தேவை என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். சிறிய தவறுகள் கூட, பின் நாட்களில் நீண்ட கால நீதிமன்ற வழக்குகளாக மாறும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். நிலம் வாங்கும் முன் பின்பற்ற வேண்டியவை: விளை நிலங்களை வீட்டு மனையாக மாற்றி, DTCP அனுமதியின்றி விற்பனை […]

பட்டாவில் இறந்தவர்களின் பெயர்களை நீக்கி அவர்களது வாரிசுகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆவணம் மூலம் உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் கிராமப்புறம், நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் ஆவணங்கள் கணினிமயம் ஆக்கப்பட்டு, இணையவழியில் அனைவரும் எளிதாக பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையில், https://eservices.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும், பல சிட்டாவில் உள்ள […]

நீர்நிலை, புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்கள் தனியாருக்குப் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க, பத்திரப் பதிவுத்துறை புதிய வழிமுறையை அறிமுகம் செய்துள்ளது. ‘தமிழ் நிலம்’ தகவல் தொகுப்பில் சிறப்பு குறியீடு வழங்கப்பட்டு, பத்திரப் பதிவுக்காக சர்வே எண்ணை உள்ளிடும் போது, அது அரசு நிலமா என்பதை தானியங்கி முறையில் கண்டறிந்து, பதிவைத் தடுக்கும். இதனால், போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலங்கள் அபகரிப்பு செய்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாடு […]