மத்திய அரசின் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தில் இந்தியா முழுவதும் 70 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சில உறுப்பினர்கள் எதிர்பாராத விதமாக காலமானார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இறந்த உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு பெரும் நிவாரணம் வழங்கியுள்ளது. இப்போது, அவர்கள் PF தொகையை எடுக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. இந்த மாற்றம் தொடர்பான புதிய சுற்றறிக்கை […]

நாடு முழுவதும் நவம்பர் 1 முதல் 30 வரை ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம் மத்திய அரசு நடத்த உள்ளது. ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற ஏதுவாக ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். கடந்த ஆண்டு 845 நகரங்களில் நவம்பர் மாதம் நடத்தப்பட்ட டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம்களில் 1.62 கோடி பேர் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்தனர். நடப்பாண்டில் நாடு முழுவதும் […]

8வது ஊதியக் குழு ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு ஊழியர்கள், எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த சூழலில், ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை ஊதியக் குழுவிடம் முன்வைக்க தயாராக உள்ளனர். சம்பள கமிஷனை அமைப்பதற்கான பணிகளையும் அரசாங்கம் தொடங்கியுள்ளது. சம்பள கமிஷன் உருவாக்கம் குறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் […]

ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே வாழ்நாள் சான்று அளிக்க தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ள பாராட்டுக்குரிய வசதி களஞ்சியம் என்ற Mobile App மூலம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. வாழ்நாள் சான்று என்பது ஒரு நபர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு ஆவணமாகும். இது பொதுவாக ஓய்வூதியம் பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் பிற அரசு சலுகைகளைப் பெறுபவர்களால் சமர்ப்பிக்கப்படுகிறது. ஓய்வூதியம் பெறுபவர்கள், அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த […]

குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வேலையில் இருந்து 31.03.2025-ம் தேதியோ அல்லது அதற்கு முன்ன்னதாகவோ பணியிலிருந்து ஓய்வு பெற்ற மத்திய அரசுப் பணியாளர்களில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் சந்தாதாரர்கள் அல்லது அவர்களின் சட்டப்பூர்வமான திருமணத் துணைவர் ஏற்கனவே கோரப்பட்ட தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் சலுகைகளுக்கும் கூடுதலாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பின்வரும் கூடுதல் சலுகைகளைப் பெறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட ஆறு மாத தகுதிவாய்ந்த […]