ஆசிரியர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் விடுவித்தல் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில்; அலுவலகங்கள் / பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற / பெறவுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் /மாவட்டக் கல்வி அலுவலர்கள் / தலைமை ஆசிரியர்கள் ஆகியோரின் பணிக்காலத்திற்கு அகத்தணிக்கை உடன் மேற்கொள்ளப்பட வேண்டும். ஓய்வு பெற்ற சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள்/தலைமை […]

ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளை குறிப்பிட்ட கால வரம்பிற்குள் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார். மூத்த குடிமக்களை மையமாக வைத்த பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாக மாதிரிக்கு இணங்க, ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளை கால வரம்பிற்குள் நிறைவேற்ற மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிபொறுப்பு), பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற 13-வது […]

குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வேலையில் இருந்து 31.03.2025-ம் தேதியோ அல்லது அதற்கு முன்ன்னதாகவோ பணியிலிருந்து ஓய்வு பெற்ற மத்திய அரசுப் பணியாளர்களில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் சந்தாதாரர்கள் அல்லது அவர்களின் சட்டப்பூர்வமான திருமணத் துணைவர் ஏற்கனவே கோரப்பட்ட தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் சலுகைகளுக்கும் கூடுதலாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பின்வரும் கூடுதல் சலுகைகளைப் பெறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட ஆறு மாத தகுதிவாய்ந்த […]

ஹரியானா மாநிலத்தில் 45 முதல் 60 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாதவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.2,750 வழங்கப்படும். ஹரியானா மாநிலத்தில் 45 முதல் 60 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாதவர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.8 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.2,750 வழங்கப்படும். இந்த பயனாளிகள் 60 வயதை அடைந்தவுடன், அவர்கள் தானாகவே முதியோர் ஓய்வூதியத்தைப் பெறத் தகுதியானவர்கள் என கல்யாணம் முதல் அமைச்சர் மனோகர் தெரிவித்துள்ளார். இது குறித்து […]

தமிழ்நாடு அரசின்‌ ஓய்வூதியதார்களுக்கு நேர்காணல்‌ செய்து கொள்ள புதிய வசதிஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களின்‌ வசதிக்காக புதிய அறிவிப்பாணைப்படி, சேலம்‌ மாவட்ட கருவூல அலகில்‌ ஓய்வூதியம்‌ பெறும்‌ குடிமை ஓய்வூதியதாரர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்‌ ஓய்வூதியம்‌ பெறுபவர்கள்‌, தாங்கள்‌ ஓய்வு பெற்ற மாதம்‌ மற்றும்‌ இந்த மாதத்திற்குள்‌ நேர்காணல்‌ செய்திட வேண்டும்‌. குடிமை குடும்ப ஓய்வூதியதாரர்கள்‌, ஆசிரியர்‌ குடும்பஓய்வூதியதாரர்கள்‌ அனைவரும்‌ தங்கள்‌ […]

ஓய்வூதியதாரர்கள் வாழ்வுச்‌ சான்றை சமர்ப்பிக்கும் புதிய நடைமுறை ஜூலை 1-ம்‌ தேதி முதல்‌ அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; ஓய்வூதியதாரர்கள்‌ தங்களது உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கான வாழ்வுச்‌ சான்றை அளிக்க ஆண்டுதோறும்‌ ஜூலை முதல்‌ செப்டம்பர்‌ வரை மூன்று மாதங்கள்‌ அவகாசம்‌ அளிக்கப்படும்‌. இணைய சேவை மையங்கள்‌, அஞ்சல்‌ வழி, கருவூலகணக்குத்‌ துறையில்‌ நேரடியாக சமர்ப்பித்தல்‌ உள்ளிட்ட வழிகளில்‌ வாழ்வுச்‌ […]

அரசு அலுவலகங்களில்‌ பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கான மாவட்ட ஓய்வூதியர்‌ குறைதீர்க்கும்‌ கூட்டம்‌ ஜுன் மாதம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்டத்தில்‌ பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில்‌ பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களின்‌ ஓய்வூதியப்‌ பலன்கள்‌ மற்றும்‌ ஓய்வூதியம்‌ பெறுவதில்‌ ஏதேனும்‌ குறைகள்‌ இருப்பின்‌ அதனை நிவர்த்தி செய்யும்‌ பொருட்டு, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ வருகின்ற 07.06.2023 புதன்கிழமை காலை 10.30 மணியளவில்‌ […]

அஞ்சலக ஒய்வூதிய குறை தீர்க்கும் முகாம் மே மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌. அகில இந்திய அஞ்சலக ஒய்வூதிய குறை தீர்க்கும் முகாம் 17.05.2023 அன்று பகல் 11:00 மணியளவில் சென்னையில் உள்ள தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் சம்மந்தப்பட்ட குறைகளை முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம் சென்னை என்கிற […]

அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேர்க்கை 31, மார்ச், 2023-ன் படி, 5.20 கோடியை கடந்தது. கடந்த 2022-23-ம் நிதியாண்டில் 1.19 கோடி புதிய சந்தாதாரர்கள் இத்திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்டனர். இது அதன் முந்தைய நிதியாண்டை விட, 20 சதவீதத்திற்கு மேல் அதிகமாகும். அடல் ஓய்வூதியத் திட்டத்தில் மேலாண்மையின் கீழ், இதுவரை மொத்த சொத்து மதிப்பு ரூ.27,200 கோடியாக உள்ளது. இந்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 8.69 சதவீதம் முதலீட்டு லாபம் […]

அனைத்துத் தரப்புச் செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பின்னர், எத்தகு இயலாமைக்கும் ஆளாகாமல் இருக்க, அரசு சார்பில் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் செய்தி முகமைகள் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கான ஓய்வூதியம் மேலும் உயர்த்தி வழங்கப்படும் […]