சென்னை தியாகராய நகர் சிவஞானம் சாலையில் உள்ள சென்னை நகர மத்திய கோட்டத்தில் அஞ்சலகங்களின் முதல்நிலை கண்காணிப்பாளரால் ஜூலை 28 அன்று காலை 11 மணிக்கு கோட்ட அளவில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
அஞ்சலகங்களில் பணியாற்றிய ஓய்வூதியர்கள், தங்களின் புகார்களை அல்லது ஆலோசனைகளை தபால், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் 18.07.2022-க்குள் அனுப்ப வேண்டும். …