பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது, பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் தைலாபுரத்தில் கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டார். ராமதாஸின் லெட்டர் பேடில் இருந்தும் அன்புமணியின் பெயர் நீக்கப்பட்டது. இதையடுத்து திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் மாநில செயற்குழு கூட்டம் கடந்த மாதம் 8-ம் தேதி நடைபெற்றது. இதில், அன்புமணியை விமர்சித்து பலரும் […]

என் மூச்சிருக்கும் வரை நான் தான் பாமக தலைவர் என்று ராமதாஸ் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாமக தலைமை பொறுப்பு தொடர்பாக ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், அன்புமணியுடன் கருத்து வேறுபாடு விவகாரத்தில் இன்னும் முடிவு வரவில்லை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் “ சமரசம் பேசுகிறோம்.. பேசிக்கொண்டே இருக்கிறோம்.. எல்லா பிரச்சனைக்கும் முடிவு […]