வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் வரும் 20-ம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடத்தப்போவதாகவும் அதில் பெருந்திரளாக பங்கேற்குமாறும் தொண்டர்களுக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில்; தமிழ்நாட்டின் உழைக்கும் வர்க்கமான வன்னிய மக்களுக்கு துரோகம் இழைக்கும் வரலாற்றில் சமூக அநீதி அரசான திமுக அரசு, இன்னும் இரு மைல்கல்களை கடந்திருக்கிறது. முதலாவதாக, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு […]

எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை. நாம் அனைவரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்போம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பாமக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.. அந்த கடித்தத்தில் “ என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களின் குரலாகவும், ஊமை சனங்களின் பாதுகாவலனாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16&ஆம் நாள் […]

பாமகவில் கடந்த சில நாட்களாக உள் கட்சி மோதல் நிலவி வரும் சூழலில் அன்புமணிக்கு எதிராக சகோதரி ஸ்ரீ காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் வெட்ட வெளிச்சம் ஆனது. ராமதாஸ் தனது மகள் வழி பேரனான முகுந்தன் […]

2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ என்ற பெயரில், நேற்று முதல் ஜூலை 23-ம் தேதி வரை கொங்கு மண்டலம், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்கிறார். முதற்கட்டமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரசார பயண தொடக்க நிகழ்விற்கு, பாஜக உள்ளிட்ட கூட்டணி […]

வேலைவாய்ப்பு குறித்து பொய்யான தகவல்களை அளித்து மக்களை ஏமாற்ற டி.என்.பி.எஸ்.சி துணை போகக்கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கடந்த ஓராண்டில் மட்டும் 17 ஆயிரம் பேருக்கும் கூடுதலானோருக்கு புதிதாக அரசு வேலைவாய்ப்பு வழங்கப் பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. கடந்த ஓராண்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே புதிய […]

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கி, 21 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் குழுவை ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ம.க தலைமை நிர்வாக குழுவில் அன்புமணி […]

திமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய உள்ளதாக பேசிய முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு பதிலளித்த ராமதாஸ், அதில் பாமக இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. எனவே, பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கும்போது கடுமையான விதிகளைப் பின்பற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் இழப்பீடு கோரி போராடிய சிஐடியு தோழர்களை விருதுநகர் எஸ்.பி. கண்ணன் […]