தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி, பா.ம.க., உடன் உறவை முறித்து கொண்டது, நாங்கள் ஆழமாக சிந்தித்து எடுத்த முடிவு. நாங்கள் வன்னியர் சமூகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. பா.ம.க., வன்னியர்களையும், தங்களுக்கு சாதகமாக, கட்சியின் நலனுக்காக பயன்படுத்தி கொள்கிறார்கள். தலித்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை அவர்கள் கையில் எடுத்தார்கள். முதலில் […]

அரசு மருத்துவமனைகளில் தூய்மைப் பணியாளர்களே மருத்துவம் அளிக்கும் அவலம் நிலவி வருகிறது. மருத்துவத் துறையின் சீரழிவுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் காலில் அடிபட்டு காயத்துடன் வந்த நோயாளி ஒருவருக்கு அங்கு பணியாற்றும் துப்புரவுப் பணியாளர் ஒருவரே மருத்துவம் அளித்த காட்சி காணொலியாக வலம் வருவது […]

பாமக நிறுவனர் ராமதாஸிடம், கட்சியின் தலைவர் அன்புமணி பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். இதனால், இருவரிடையே ஏற்பட்ட மோதல் போக்கு முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாமகவின் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் அதிகார மோதல் உச்சத்தில் இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், அடுத்தடுத்து அவர் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார். தலைமை பண்பு கிடையாது, கூட்டணி குறித்து முடிவு […]

பாமக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வடிவேல் இராவணன் நீக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாமகவில் மருத்துவர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக பாமகவில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை மருத்துவர் ராமதாஸ் நியமித்து வருகிறார். அந்தவகையில் தற்போது வடிவேல் இராவணன் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, முரளி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் […]

ஜூலை 25-ம் தேதி முதல் 100 நாட்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பெரும் கொடுமைகளிலில் இருந்தும், பெரும் துன்பங்களில் இருந்தும், பெரும் நெருக்கடிகளில் இருந்தும், வள்ளுவரால்,‘‘அல்லவை செய்தொழுகும் வேந்து’’ என்று விமர்சிக்கப்பட்ட கொடுங்கோன்மையில் இருந்தும் உடனடியாக மீட்டெடுக்கப்பட வேண்டிய ஒரு பிரிவு மக்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் திமுக ஆட்சியின் துயரத்தை […]

பாமக கட்சிக்குள் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மகன் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசுகையில், “உயிருள்ள என்னை உதாசனம் செய்து விட்டு, என் உருவப்படத்தை வைத்து உற்சாகம் செய்கிறார்கள். என்னை நடை பிணமாக்கி என் பெயரில் நடைபயணம் செல்வதாக அன்புமணி சொல்கிறார். எல்லாமே நாடகம். என்னை […]

நாமக்கல் மாவட்டத்தில் தோட்டத்து வீட்டில் மூதாட்டி வெட்டிக் கொலை. வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த சீத்தம்பூண்டி கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி  நேற்றிரவு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தோட்டத்து வீடுகளில் தனியாக வாழும் மக்கள் […]

திண்டுக்கல் மாவட்ட பாமக நிர்வாகிகளை கூண்டோடு மாற்ற ராமதாஸ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. கூட்டணியை பலப்படுத்த பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில், அதில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை அழைத்து வர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பாமக கூட்டணி பேச்சு வார்த்தையில் இடியை இறக்குவது போல தந்தை […]