புதுவை சாணாரப்பேட்டை சுடுகாடு பகுதியில் ஆயுதங்களுடன் ஒரு ரவுடி கும்பல் பதுங்கி இருப்பதாக வடக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து, காவல்துறை கண்காணிப்பாளர் பக்தவத்சலம் உத்தரவின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் ஆய்வாளர் ஜெய்சங்கர், துணை ஆய்வாளர் கலையரசன் உள்ளிட்டோரின் தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதியில் ரோந்துக்காக சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த 6 பேர் கொண்ட கும்பல் […]