தமிழகத்தில் அரிசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் நெல் விளைச்சல் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் தாக்கமாக தமிழக சந்தைக்கு வரும் அரிசியின் வரத்து குறைந்து, பல்வேறு அரிசி ரகங்களின் விலை சுமார் 10 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கும் […]

