ராணுவ தளபதியை விமர்சித்தது தொடர்பான ஆடியோ லீக்கான நிலையில், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்து அந்நாட்டு அரசமைப்பு சாசன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இந்த நிலையில் தாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன்சென்னுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். அப்போது தாய்லாந்து ராணுவத் தளபதியை ஷினவத்ரா விமர்சித்துள்ளார். இதுதொடர்பான உரையாடல்கள் கசிந்து நாட்டில் சர்ச்சையை […]