சென்னை ரிப்பன் மாளிகை முன்பு 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்ல காவல்துறை உத்தரவு. போராட்டத்தை தொடர்வதால் பொது அமைதி, பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுகிறது. உத்தரவை மீறி போராட்டத்தை தொடர்ந்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை எச்சரிக்கை. சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்கள் மற்றும் அம்பத்தூர், அண்ணாநகர் மண்டலங்களில் சில வார்டுகள் தவிர மற்ற பகுதிகளில் தூய்மைப்பணி தனியாரிடம் விடப்பட்டுள்ளது. […]