புற்றுநோய் சிகிச்சைக்கான ஒரு ஊசியை ரூ.11,000-க்கு வாங்க முடியும் என்ற நிலையில், அதே மருந்துக்குத் தனியார் மருத்துவமனை ரூ.1.30 லட்சம் வசூலித்த சம்பவம் உச்சநீதிமன்றத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உயிரைக் காக்க வேண்டிய மருத்துவச் சிகிச்சையில் மருந்துகளின் விலை இவ்வளவு அதிகமாக இருப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பிய நீதிபதிகள், மத்திய அரசின் விலைக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் குறித்தும் விளக்கம் கேட்டுள்ளனர். மருந்துகளின் விலை நிர்ணயம் மற்றும் மருத்துவமனைகள், மருந்து […]

