அன்றாட சமையலில் பலரும் கண்டுகொள்ளாமல் ஒதுக்கி வைக்கும் பாரம்பரிய காய்கறிகளில் புடலங்காயும் ஒன்று. தோற்றத்தைக் கண்டு பலரும் சாப்பிடத் தயங்கும் இந்தக் காய்கறியில், மனித உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் மெக்னீசியம், மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட அத்தியாவசிய தாதுக்கள் மிக அதிகளவில் நிறைந்துள்ளன. குறைந்த கலோரிகளும் அதிக நீர்ச்சத்தும் கொண்டுள்ள புடலங்காய், உடலின் வளர்சிதை மாற்றத்தைச் சீராக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முதன்மை பங்கு வகிக்கிறது. […]