பாகிஸ்தானிற்கான இந்திய தூதராக இருந்தவர் அஜய் பிசாரியா. இவர் ‘அங்கேர் மேனேஜ்மென்ட்: இந்தியா பாகிஸ்தான் இடையேயான பிரச்சனைக்குரிய தூதரக உறவு’ என்ற புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்தப் புத்தகத்தில் பாகிஸ்தான் இந்தியாவின் மீது தொடுத்த தீவிரவாத தாக்குதல்களையும் அதனை இந்தியா எதிர்கொண்ட விதத்தையும் பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர் இந்திய தூதராக இருந்தபோது இரண்டு நாடுகளுக்கு இடையே நிலவிய அரசியல் மற்றும் போர் சூழல்களையும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். […]

பாலகோட் வான்வழித் தாக்குதலின் 4வது நினைவு தினம் இன்று. பாகிஸ்தானின் பாலகோட்டில் 2019 ஆம் ஆண்டு இதே நாளில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்தியாவுக்கு எதிரான கொடூரமான புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த வான்வழி தாக்குதல் திட்டமிடப்பட்டது.. இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாக நீடித்த ஒரு துல்லியமான மற்றும் விரைவான வான்வழித் தாக்குதலில், பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமதுவின் மிகப்பெரிய […]

உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாட்டங்கள் நடைபெற்ற அதே நாள் இந்திய வரலாற்றின் கருப்பு நாளாக மாறிய தினம்.. ஆம்.. கடந்த 2019-ம் ஆண்டு இதே பிப்ரவரி 14-ம் நாளில் தான் ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் மோசமான பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்கள் இன்னுயிரை நீத்தனர்.. இந்த கொடூர தாக்குதலின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.. 2019 பிப்ரவரி 14-ம் […]