கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா கடலோர பகுதிகளை ஒட்டி, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து, வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடையக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் […]