பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கி, 21 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் குழுவை ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ம.க தலைமை நிர்வாக குழுவில் அன்புமணி […]

பாமக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வடிவேல் இராவணன் நீக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாமகவில் மருத்துவர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக பாமகவில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை மருத்துவர் ராமதாஸ் நியமித்து வருகிறார். அந்தவகையில் தற்போது வடிவேல் இராவணன் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, முரளி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் […]

பாமகவில் அன்புமணி – ராமதாஸ் இருவருக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருவதால் கட்சியில் குழப்பமான சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மகன் அன்புமணி மீதும் மருமகள் செளமியா மீதும் அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்தார். கட்சி என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் உள்ளது.  மாவட்ட […]