சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய பத்திரப் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பத்திரப் பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது வைகாசி மாதத்தின் மங்களகரமான தினங்களான 05.06.2025 […]

“பதிவு மசோதா 2025’ வரைவு குறித்து பரிந்துரைகளை 30 நாட்களுக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என நில வளத்துறை தெரிவித்துள்ளது ‌. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள நில வளத்துறை, நவீனமிக்க, ஆன்லைன் வழி, காகிதமற்ற மற்றும் குடிமக்களுக்கு உகந்த ‘பதிவு மசோதா 2025’ என்ற வரைவைத் தயாரித்துள்ளது. இது அரசியலமைப்பிற்கு முந்தைய பதிவுச் சட்டம், 1908-க்கு மாற்றாக […]