அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் விருப்பம் இருந்தால் மட்டுமே பணிநிரவல் செய்யப்பட வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘இடைநிலை ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் பணி நிரவலுக்கு உட்பட்ட ஆசிரியர்களை விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி ஆணை பெறுமாறு வற்புறுத்தக் கூடாது. அதேபோல், வற்புறுத்தி பணிநிரவல் […]

தமிழகத்தில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும் களப்பணி மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்; தமிழகத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகள் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளியில் சேரும் அனைத்து குழந்தைகளும் இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயில […]

விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கல்வி சார்ந்த நிகழ்வுகளுக்கு மாணவிகளை வெளியூர் அழைத்துச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பணையின் செயல்படுத்தும் விதமாக செயல்முறைகளில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் மாணவர்கள் […]

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களை வரன்முறைப்படுத்த அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களை முறைப்படுத்தும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப கால அவகாசம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வித் தரத்தை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பு கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு, வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், இணையதளம் […]

மாணவர்களின் உடல்நலன் கருதி ‘வாட்டர் பெல்’ திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி பள்ளிகளில் ஒரு நாளைக்கு 3 முறை தண்ணீர் இடைவேளை வழங்கப்படும்’ என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: உடல் நீரிழப்பு மாணவர்களின் அறிவாற்றல், கவனம் மற்றும் கல்வி செயல்திறனை கணிசமாகப் பாதிக்கும். எனவே, பள்ளிகளில் தண்ணீர் நுகர்வுக்கு […]

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வித்யாதன் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஊக்கத்தொகை பெறுவதற்கு 10-ம் வகுப்பு தேர்வில் 80% மதிப்பெண்களும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 60% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். 80% அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள், அரசுத் திட்டங்களின் கீழ் ரூ. 10,000 உதவித்தொகை பெற வாய்ப்புள்ளது, 10ஆம் வகுப்பு தேர்வில் 80% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கும் […]

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் இன்று மதியம் வெளியிடப்படுகிறது என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு […]

மாற்றுத்திறனாளிகளுக்கான பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பட்டியல் கோரப்பட்டு அதற்கான கருத்துருக்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் தகுதியுள்ள ஆசிரியர்களின் உத்தேச பெயர்ப் பட்டியல் […]

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் ஜூன் 30-ம் தேதி மதியம் வெளியிடப்படுகிறது. அதன் விவரங்களை மாணவர்கள் தேர்வுத் துறையின் […]

மாணவர்களின் சாதியை வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் குறிப்பிடக் கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் சாதிப் பெயர்களை ரகசியமாக ஆசிரியர்கள் வைக்க வேண்டும். மாணவர்களின் சாதியை வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் குறிப்பிடக் கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களின் சாதி பெயரை மறைமுகமாக கூட அடைப்புக்குறிக்குள் குறிப்பிடக் கூடாது. சாதியை வெளிப்படுத்தும் வகையில் கைகளில் மாணவர்கள் பட்டைகள் அணிய தடை. சாதிய குறியீடுகளை வெளிப்படுத்தும் வகையில் சைக்கிளில் […]