தாயிடம் மகன் விதித்த சில கட்டுப்பாடுகள், நாளடைவில் குடும்பத்துக்குள் தொடர்ந்து பிரச்சினையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தாய்-மகன் இடையே ஏற்பட்ட தகராறு எதிர்பாராத விபரீதத்தில் முடிந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோலார்பேட்டையை அடுத்த கருப்பனூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் கஸ்தூரி (53). இவரது கணவர் அண்ணாதுரை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். அதன் பிறகு குடும்பத்தை தனியாக கவனித்து வந்த […]