பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தாமரைச் செல்வியின் தனிப்பட்ட வாழ்க்கை தற்போது பேசுபொருளாகியுள்ளது. அவரது கணவர் பார்த்தசாரதி, இருவரும் பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்திருப்பது இந்த விவாதத்துக்குக் காரணமாகியுள்ளது. மேடை நாடகங்களில் நடித்து வாழ்க்கையைத் தொடங்கிய தாமரைச் செல்விக்கு, பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தியது. கிராமியக் கலைப் பின்னணியில் இருந்து வந்த அவர், நிகழ்ச்சியில் வெளிப்படையாகப் பேசியதாலும், உணர்ச்சிகரமான […]

