நம் வீடுகளில் எழும் சில வாசனைகள் காந்தம் போலப் பாம்புகளை ஈர்க்கின்றன. அவற்றுள், பாம்புகளை ஈர்க்கும் முதன்மையான காரணி அவற்றின் உணவே ஆகும். இயல்பாகவே, மனிதர்கள் உண்ணும் உணவைப் பாம்புகள் உண்பதில்லை. ஆனால், மனிதர்கள் சமைத்து வைக்கும் உணவை நாடி வரும் சிறிய பூச்சிகளின் வாசனையை நுகர்ந்தே அவை வீட்டிற்குள் நுழைகின்றன. உங்கள் வீட்டில் எலிகள் மற்றும் பெருச்சாளிகள் அதிக அளவில் இருந்தால், பாம்புகள் அங்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். […]