வருகின்ற 15-ம் தேதி தைத்திங்கள் ஒன்றாம் நாள் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது உலகத் தமிழர்களும் பொங்கல் பண்டிகையை விமர்சையாக கொண்டாட இருக்கிறார்கள். இந்தப் பண்டிகை சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுவதோடு விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் பண்டிகையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழர்கள் ஜாதி மத பேதமின்றி பொங்கல் பண்டிகையை கலாச்சார பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். …