நவி மும்பையிலிருந்து ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் (6E 225 – VT-NOG), தரையிறங்கி நிறுத்தும் இடத்தில் உள்ள கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை சுமார் 9:02 மணியளவில், விமானம் ‘பே எண் 06’ (Bay No. 06) பகுதியில் நிறுத்தப்படும்போது இந்த விபத்து நிகழ்ந்தது. விமானம், ‘விஷுவல் டாக்கிங் கைடன்ஸ் சிஸ்டம்’ (VDGS) என்ற வழிகாட்டும் கம்பத்தின் மீது […]