தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இன்று எஸ்எம்சி குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2024-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் புதிய உறுப்பினர்களை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் […]

தமிழக அரசின் இலக்கியத் திறனறி தேர்வுக்கு செப்டம்பர் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து விதமான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 […]

2025-2026ம் கல்வியாண்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இது குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல கல்வி உதவித்தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 2025-2026ம் கல்வியாண்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி […]

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் நவம்பர் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளாக கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இந்த கல்வி ஆண்டிலும் மாணவர்களுக்கு கலை திருவிழா […]

பி.எட். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இந்த ஆண்டு முதல்முறையாக இணைய வழியில் நடத்தப்படும். வெளியூர் மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையில், முதல்வர் அறிவுறுத்தலின் படி, இந்த ஆண்டு பி.எட். சேர்க்கைக்கான கலந்தாய்வை இணைய வழியில் நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 9-ம் தேதி மாலை 5 மணி வரை இணைய வழியில் கலந்தாய்வு நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; கடந்த ஆண்டுகளில் பி.எட். […]

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நடப்பு கல்வியாண்டில் (2025-26) பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்களுக்கு துணை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதில் பிளஸ்-2 துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாத மாணவர்கள் பங்கேற்கலாம். இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; நடப்பு கல்வியாண்டில் (2025-26) பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வில் […]

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் ஆடிப்பூரம் விழாவையொட்டி இன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இரு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் இன்று இயங்காது. செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா 26-ம் தேதி சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி 26-ம் […]

நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடைசி நாள் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்​டில் அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களில் முதுகலை படிப்பு சேர்க்​கைக்​கான ஆன்​லைன் விண்​ணப்​பப் பதிவுக்கான காலஅவ​காசம் ஜூலை 15-ம் தேதியுடன் முடிவடைந்​த​து. முதல்​வரின் அறி​வுறுத்​தலின் பேரில், மாணவர்​களின் நலன் கருதி கடைசி நாள் ஜூலை 31 வரை நீட்​டிக்​கப்​படு​கிறது. இன்னும் […]

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் நவம்பர் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளாக கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, […]

பெற்றோர் பெயரை திருத்துவற்கு அசல் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (டிசி) அல்லது தலைமை ஆசிரியரால் சான்றொப்பம் இடப்பட்ட சான்றிதழ் நகல் பெற தலைமை ஆசிரியரின் கடிதம், கல்விச் சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் கோரும் விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டியது அவசியம். அதன்படி, மாணவர் பெயர், பெற்றோர் பெயரை திருத்துவற்கு அசல் […]