காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடுவது மற்றும் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி துறை இயக்குநர், அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தமிழகத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து நிதி வழங்கப்படும். இந்த பள்ளிகள் மாணவர்களை அதிக அளவில் சேர்த்திருக்க வேண்டும். மாணவர்கள் […]

அரசுப் பள்ளிகளில் ஸ்லாஸ் தேர்வு முடிவுகளின்படி மாணவர்கள் கற்றல் நிலையை மேம்படுத்தும் பணிகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு பாட கற்றல் இடைவெளியை கண்டறிய பிப்ரவரி 4, 5, 6-ம் […]

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளது. அப்போது சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில் மோதி 50 மீட்டர் தூரம் வேன் […]

அரசுப் பள்ளிகளில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களின் மேம்பாட்டுக்கான திறன் இயக்கத்தை அமல்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழி மற்றும் கணிதப் பாடத்தின் கற்றலை மேம்படுத்தும் வகையில் ‘திறன்’ எனும் இயக்கம் 6 மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பயிற்சிக் கட்டங்கள் மற்றும் ஆசிரியர் கையேடுகள் […]

தமிழகத்தில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும் களப்பணி மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்; தமிழகத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகள் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளியில் சேரும் அனைத்து குழந்தைகளும் இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயில […]

நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது எனக் கூறி மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் மருத்துவப் படிப்பிற்கான இளநிலை நீட் தேர்வு 2025 இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த ஆவடி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் கனமழை காரணமாக 3 மணியில் […]

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை ரூ.25,000 பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட போட்டித் தேர்வு பிரிவு, மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எளிதாக அணுக, தமிழக இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், அகில இந்திய குடிமை பணி தேர்வு மையத்துடன் இணைந்து, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குடிமை பணிகள் […]

பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறுகள் அணிவதை தடை செய்தும், மாணவர்களின் வருகை பதிவேடில், அவர்களின் ஜாதி தொடர்பான விபரங்கள் இருக்கக்கூடாது  எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு: * அனைத்து பள்ளி ஆசிரியர்களும் ஊழியர்களும், சமூக பிரச்னைகள், ஜாதி பாகுபாடு, பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள், ராகிங் குறித்து தங்களுக்குள் கலந்தாலோசித்து, பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி வழங்க […]

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வித்யாதன் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஊக்கத்தொகை பெறுவதற்கு 10-ம் வகுப்பு தேர்வில் 80% மதிப்பெண்களும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 60% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். 80% அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள், அரசுத் திட்டங்களின் கீழ் ரூ. 10,000 உதவித்தொகை பெற வாய்ப்புள்ளது, 10ஆம் வகுப்பு தேர்வில் 80% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கும் […]

மாணவர்களின் சாதியை வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் குறிப்பிடக் கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் சாதிப் பெயர்களை ரகசியமாக ஆசிரியர்கள் வைக்க வேண்டும். மாணவர்களின் சாதியை வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் குறிப்பிடக் கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களின் சாதி பெயரை மறைமுகமாக கூட அடைப்புக்குறிக்குள் குறிப்பிடக் கூடாது. சாதியை வெளிப்படுத்தும் வகையில் கைகளில் மாணவர்கள் பட்டைகள் அணிய தடை. சாதிய குறியீடுகளை வெளிப்படுத்தும் வகையில் சைக்கிளில் […]