பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின், மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்கள் ஆகியோரின் குழந்தைகள், ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயில உதவித்தொகை பெறுவதற்காக மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ், 2025-26 -ம் நிதி ஆண்டில், 1,000 […]

குறைந்த வட்டி விகிதத்தில் சுயதொழிலுக்காக வழங்கப்படும் கடன்திட்டத்தை சிறுபான்மையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் ஆகிய அலுவலகங்களில் விண்ணப்பத்தை பெற்று வங்கி கோரும் ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். சென்னை மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு, சுய வேலைவாய்ப்பு […]

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த (2025-26) கல்வி ஆண்டில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி முடிவடைந்தது. 2.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதில், 1.85 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணமும் செலுத்தி, ஆன்லைன் பதிவை […]