நவம்​பர் மாதம் நடை​பெற உள்ள பாலிடெக்​னிக் செமஸ்​டர் தேர்​வுக்கு கட்டணம் செலுத்​த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு பொறியியல் டிப்ளமா படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் மாதம் நடைபெற உள்ளன.‘நவம்​பர் மாதம் நடை​பெற உள்ள பாலிடெக்​னிக் தேர்​வுக்கு எந்த வித​மான அபராத கட்​ட​ண​மும் செலுத்​தாமல் செப்​டம்பர் 20-ம் தேதி வரை​யும், ரூ.150 அபராத கட்​ட​ணம் செலுத்தி செப்​டம்பர் 21 […]

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நடத்துவதற்கான வழிகாட்டுதல் விதிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தன்னார்வலர் பணிகளையும், தனித்திறன்களை வளர்ப்பதுடன், சமூக வளர்ச்சிக்கான பங்களிப்புகளை அளிப்பதற்கும் நாட்டு நலப்பணித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில்; என்எஸ்எஸ் சிறப்பு முகாம் 7 நாட்களுக்கு நடத்தப்பட […]

தேசிய திறந்தநிலை பள்ளி திட்டத்தில் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ள முடியுமா என்பது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தேர்வு கட்டுட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; பள்ளிக்கல்வியை பொருத்தவரையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் சிபிஎஸ்இ, தேசிய திறந்தநிலை பள்ளி (என்ஐஓஎஸ்) என இரு வகையான கல்வித் […]

பி.எட். மற்றும் எம்.எட். பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 30.09.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; முதல்வர் ஆலோசனைப்படி 20.06.2025 அன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26-ம் ஆண்டிற்கான பி.எட். மாணவர்களின் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் […]

அரசுப் பள்ளிகளில் திறன் திட்டத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கு தனி வினாத்தாள்களை தயாரித்து வழங்குவதற்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் &, தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் ஆகியோர் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: ”மாநில பாடத்திட்டத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திறன் திட்டம் சிறப்பாக செயல்படுவதற்கான பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த […]

ஆயுஷ் துணை மருத்துவப் படிப்புப் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கான (DIP / DNT) பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கு வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆனணயரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; 2025-2026-ம் கல்வியாண்டிற்கு, சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு ஆயுஷ் துணை மருத்துவ படிப்புப் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கான (DIP / DNT) பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கான […]

மாணவர்கள் மரக்கன்றுகள் நட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: காலநிலை மாற்றத்துக்கு எதிராக மாணவர்களிடம் பொது விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை இயக்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் பள்ளிகளில் ஒரே நாளில் மரக்கன்று நடுதல் இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்றை பள்ளி, […]

அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ-ல் பயிற்சி பெற்றுள்ள மாணவர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்று பயன்பெறலாம். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PMNAM) இன்று தருமபுரி (கடகத்தூர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பொதுத்துறை மற்றும் பிரபல முன்னனி […]

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இன்று எஸ்எம்சி குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2024-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் புதிய உறுப்பினர்களை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் […]

தமிழக அரசின் இலக்கியத் திறனறி தேர்வுக்கு செப்டம்பர் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து விதமான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 […]