தொழில்‌ தொடங்க மின்‌ உபகரணங்கள்‌ கொள்முதல்‌ செய்ய தாட்கோ மூலம்‌ ஒருவருக்கு ரூ.3 லட்சம்‌ வரை வழங்கப்படும். ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ தொழில்‌ முனைவோரின்‌ பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்‌ வகையில்‌ ஆவின்‌ பாலகம்‌ அமைக்கும்‌ திட்டம்‌ செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்கும்‌ விண்ணப்பதாரர்‌ ஆவின்‌ நிறுவனத்தின்‌ விதிமுறைகளுக்கு உட்பட்டுகடை அமைத்து ஆவின்‌ நிறுவனத்திடம்‌ ஒப்பந்தம்‌ செய்யப்பட வேண்டும்‌. தொழில்‌ செய்ய தாட்கோ மூலம்‌ மின்‌ வாகனம்‌, உறைவிப்பான்‌, குளிர்விப்பன்‌ […]

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் தருமபுரி மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்ற மீன் பண்ணைகளுக்கு மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு உள்ளீட்டு மானியம் வழங்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆட்சியரை தலைவராகக் கொண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தருமபுரி மாவட்ட மீன்வளர்போர் மேம்பாட்டு முகமையில் மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் விவசாயிகள் […]

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்களில்‌ மீனவ விவசாயிகள் மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத்துறை, மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பல்வேறு மீன்வள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சலுகை அடிப்படையில் மானியம் வழங்கப்படுகிறது. மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு விபத்து காப்பீட்டுத் தொகை வழங்கி, காப்பீட்டுத் […]

கலைஞர் அவர்கள் அரவாணிகளும் இந்தச் சமுதாயத்தின் அங்கம் என்பதால் அவர்களின் நலனை உறுதி செய்வதற்காக, “தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்” 15.4.2008 அன்று தொடங்கப்பட்டு, அரவாணிகளின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் வகையில் அவர்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைக் வழங்கினார். அத்துடன் அரவாணிகள் என்னும் பெயரை திருநங்கையர் எனவும் மாற்றி அறிவித்தார்கள். அதன் பிறகு அரவாணிகள் நலவாரியம் திருநங்கையர் நலவாரியம் என வழங்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் திருநங்கையர் நலவாரியத்தினை 15 அலுவல்சார் […]

உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் சொந்தமாக எந்த உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளையும் அமைக்கவில்லை. இருப்பினும், மத்திய துறைத் திட்டங்களான பிரதமரின் வேளாண்-கடல் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் பதப்படுத்தும் தொகுப்புகளின் மேம்பாட்டுக்கான திட்டம்(பி.எம்.கே.எஸ்.ஒய்.), உணவுப் பதப்படுத்தும் தொழிலுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துகிறது. இவற்றின் மூலம் இத்தகைய தொழில்களை அமைப்பதை அரசு ஊக்குவிக்கிறது. தொழில்வளம்‌ பெருகுவதற்கான இணக்கச்‌ சூழலை மேம்படுத்துவதிலும்‌ அதன்‌ மூலம்‌ கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை […]