Subsidy: 12-ம் வகுப்பு முடித்து இருந்ததால் போதும்… ரூ.75 லட்சம் வரை மானியம்…! முழு விவரம்

tn Govt subcidy 2025

ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ மக்களின்‌ பொருளாதார மேம்பாட்டுத்‌ திட்டத்தின் கீழ்‌ 50 உறுப்பினர்களைக்‌ கொண்ட மகளிர்‌ கூட்டுறவு பால்‌ உற்பத்தியாளர்‌ கூட்டுறவு சங்கங்கள்‌ அமைக்க சேலம் மாவட்டத்திற்கு ஒரு ஆதிதிராவிடர்‌ மகளிர்‌ மற்றும்‌ ஒரு பழங்குடியின மகளிருக்கு தலா ரூ.1 இலட்சம்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தாட்கோ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத்‌ திட்டத்திற்கு தாட்கோ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின்‌ கீழ்‌ 50 உறுப்பினர்களைக்‌ கொண்ட மகளிர்‌ கூட்டுறவு பால்‌ உற்பத்தியாளர்‌ கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ அமைத்திட ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில்‌ பயன்‌ பெற ஆதிதிராவிடர்‌ பயனாளிகள்‌ https://application.tahdco.com என்ற இணையதளத்திலும்‌, பழங்குடியினர்‌ பயனாளிகள்‌ https://fast.tahdco.com என்ற இணையதளத்திலும்‌ பதிவு செய்து பயன்பெறலாம்‌.

இளைஞர்களுக்கு மானியம்

தமிழ்நாடு அரசு ஆர்வமுள்ள படித்த இளைஞர்கள்‌ புதிதாக சுயதொழில்‌ தொடங்க முதல்‌ தலைமுறை தொழில்‌ முனைவோரின்‌ தொடக்க முன்னெடுப்புகளை ஆதரித்து, நெறிப்படுத்தி, ஊக்குவிக்கும்‌ நோக்கத்துடன்‌ புதிய தொழில்‌ முனைவோர்‌ மற்றும்‌ தொழில்‌ நிறுவன மேம்பாட்டுத்‌ திட்டத்தினை அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ உற்பத்தி மற்றும்‌ சேவை சார்ந்த, திட்டத்தொகை ரூ.10 இலட்சத்துக்கு மேலும்‌ ரூ.50 இலட்சத்தை மிகாமலும்‌ உள்ள தொழில்‌ திட்டங்களுக்கு மானியத்துடன்‌ கூடிய கடனுதவி ஏற்பாடு செய்யப்படுகிறது. மானியம்‌ திட்டத்‌ தொகையில்‌ 25% பட்டியல்‌ வகுப்பு, பட்டியல்‌ பழங்குடி இனம்‌ மற்றும்‌ மாற்றுத்‌ திறனாளிகளுக்குக்‌ கூடுதல்‌ மானியமாக திட்டத்தொகையில்‌ 10% வழங்கப்படுகிறது. மானிய உச்ச வரம்பு ரூ.75 இலட்சம்‌. மேலும்‌, கடனைத்‌ திரும்பச்‌ செலுத்தும்‌ காலம்‌ முழுமைக்கும்‌ 3% வட்டி மானியமும்‌ வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயனுற குறைந்த பட்சம்‌ 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டம்‌ அல்லது தொழிற்பயிற்சி சான்றிதழ்‌ பெற்றிருக்க வேண்டும்‌. வயது 24 க்கு குறையாதிருக்க வேண்டும், உச்ச வரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 ஆகவும்‌ இடஒதுக்கீட்டு பிரிவினர்‌ மற்றும்‌ பெண்கள்‌ உள்ளிட்ட சிறப்புப்‌ பிரிவினருக்கு 45 ஆகவும்‌ நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனிநபர்‌ மட்டுமின்றி தகுதி பெற்ற ஒன்றுக்கு மேற்பட்டோர்‌ இணைந்த கூட்டாண்மைப்‌ பங்குதாரர்‌ அமைப்புகளும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயன்‌ பெறலாம்‌. முதலீட்டாளர்‌ பங்கு பொதுப்‌ பிரிவினருக்கு திட்டத்‌ தொகையில்‌ 10% சிறப்புப்‌ பிரிவினர்‌ 5% செலுத்திடல்‌ வேண்டும்‌.

Read more: செக்..! தேர்வு செய்யப்பட்ட 2346 ஆசிரியர்கள் குற்ற பின்னணி…! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு…!

maha

Next Post

அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்களுக்கு செம சான்ஸ்.. இதுதான் கடைசி தேதி..!! - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

Thu Jun 26 , 2025
தமிழகத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. ஜூலை 1, 2025 முதல் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜூன் 30, 2026 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில்: “2025-2026-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது, 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என […]
patta 2025

You May Like