ஆக்சியம்-4 திட்டத்தின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த சுபன்ஷு சுக்லா, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன் ஆகிய 4 விண்வெளி வீரர்கள், கடந்த ஜூன் 25-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டுச்சென்றனர். அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஜூன் 25ம் தேதி இந்திய நேரப்படி நண்பகல் 12:01 மணியளவில் புறப்பட்டுச் சென்றனர். […]

இந்தியாவின் விண்வெளிப் பயண வரலாற்றில் புதிய அத்தியாயமாக, சுபன்ஷு சுக்லா இன்று விண்வெளிக்கு செல்கிறார். பால்கன்-9 ராக்கெட் மூலம் ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம் -4′ என்ற மனித விண்வெளி பயணத்திற்கான ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. இந்த டிராகன் விண்கலம் உலகின் மிக சக்திவாய்ந்த ராக்கெட் என்று அழைக்கப்படுகிறது. இது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். டிராகன் காப்ஸ்யூல்: […]