fbpx

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில், மலை பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மதுபாட்டில்களை கூடுதலாக ரூ.10-க்கு விற்பனை செய்து, காலி மதுபாட்டில்களை திருப்பி தரும் போது, அந்த கூடுதலாக வசூலித்த ரூ.10-யை …

தமிழகத்தில் பல பகுதிகளிலும் திடீரென்று செங்கல் விலை உயர்ந்துள்ளது. பல மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக செங்கற்கள் விலை உயர்ந்துள்ளது. ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன்புதூர், திட்டுவிளையில் மழையால் செங்கல் சூளைகளில் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தட்டுபாடு காரணமாக 3,000 செங்கற்கள் கொண்ட ஒரு லோடின் விலை 15,000 ரூபாயில் இருந்து …

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையில் நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் 30) …

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த …

Poisonous liquor: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோட்டைமேடு பகுதியில் உள்ள கோமுகி ஆற்றங்கரை அருகே நந்தவனம் பகுதியில் 18ம்தேதி இரவு சாராயம் வாங்கி குடித்த பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன. அவர்களுக்கு வயிற்று வலி, கண்பார்வை இழப்பு …

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது.

தமிழக அரசின் சட்டசபை ஆண்டுதோறும் ஜூன் மாதம் கூடுவது வழக்கம். நடப்பாண்டிற்கான சட்டசபை கூட்டம் வரும் ஜூன் 20ம் தேதி கூடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, தமிழக சட்டசபை …

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதியே தொடங்கவுள்ளதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். நெல்லையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது கூறிய அவர், ”தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதிக்கு பதில் ஜூன் 20ஆம் தேதியே தொடங்கவுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதிக்கு …

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கள்ளக் கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு கோடை காலம் தொடங்கியதில் இருந்து கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது. வெப்ப அலையால் சிலர் உயிரிழக்கும் சூழலும் ஏற்பட்டது. இதையடுத்து, அதற்கு நேர்மாறாக பல இடங்களில் கோடை மழையும் கொட்டித்தீர்த்தது. இந்நிலையில், உலகம் முழுவதுமே …

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 துணைத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற்றது.  சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே …

Bird flu vaccine: 4 மாநிலங்களில் பரவைக்காய்ச்சல் பரவல் வேகமெடுத்துள்ளதையடுத்து, தமிழகத்தில் உள்ள பண்ணைகளில் கோழிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் பொதுவாக புலம்பெயர்ந்த பறவைகளிடையே பரவுவதாக சொல்லப்படுகிறது. இது வளர்ப்பு கோழி பறவைகள் மத்தியில் வெடிப்பை ஏற்படுத்தும். இது புலம்பெயர்ந்த பறவைகள் கோழிகளுடன் தொடர்பு கொண்டால் இவ்வாறு ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. …