டாஸ்மாக் மது விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் திடீர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது. 3 நாட்கள் நடந்த இந்த சோதனையில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை மேற்கொண்டு சோதனை […]

தமிழக அரசியலில் புயலை கிளப்பிய டாஸ்மாக் வழக்கை விசாரித்து வரும் ED அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மண்டல அமலாக்கத்துறை இணை இயக்குநர் பியூஸ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி ஆகிய இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தையே பரபரப்பு உள்ளாக்கிய வழக்குகளான கனிமவளக் கொள்ளை வழக்கு, டாஸ்மாக் வழக்கு, அமைச்சர் துரைமுருகன் வழக்கு, எம்.பி கதிர் ஆனந்த் வழக்கு, முன்னாள் அமைச்சர் […]