2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி படுதோல்வியை சந்தித்த நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள “நான் அரசியலை விட்டு வெளியேறுகிறேன், என் குடும்பத்தை நான் துறக்கிறேன்… இதைத்தான் சஞ்சய் யாதவும் ரமீஸ்வும் என்னிடம் கேட்டார்கள் … மேலும் நான் எல்லா பழிகளையும் […]

பீகார் முன்னாள் முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருடன், விஐபி தலைவர் முகேஷ் சஹானி துணை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாட்னாவில் நடந்த இந்தியா கூட்டணியின் கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது, ​​மூத்த காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் இந்த முடிவை வெளியிட்டார். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தேஜஸ்வி யாதவ், ஆளும் NDA மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தொடங்கினார்.. […]

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக பீகார் முன்னாள் துணை முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். பல நாட்கள் ஊகங்களுக்குப் பிறகு, எதிர்க்கட்சி கூட்டணியின் முக்கிய அழுத்தத்தின் பேரில், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான மகாகத்பந்தனின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று அறிவிக்கப்பட்டார். இந்தியா கூட்டணியின் கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் […]

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மற்றொரு முக்கிய தேர்தல் வாக்குறுதியாக, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் , மகாகத்பந்தன் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் உள்ள அனைத்து ‘ஜீவிகா முதல்வர் தீதி திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு’ ரூ.30,000 மாத சம்பளத்துடன் நிரந்தர அரசு வேலைகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் தனது அரசாங்கம் நிரந்தரமாக்கும் என்றும், அவர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் அதே வேளையில் அவர்களுக்கு […]

நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். இந்த முடிவு தனது கட்சியால் கட்சியின் நன்மைக்காக எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார். மேலும் “இது கட்சியின் நலனுக்காக நாங்கள் எடுத்த முடிவு. நான் போட்டியிட்டால், அது தேவையான நிறுவனப் பணிகளிலிருந்து என்னைத் திசை திருப்பிவிடும்.. .ட்சியின் பரந்த நலனுக்காக கட்சிப் பணிகளைத் தொடருவேன்,” என்று தெரிவித்தார். […]

பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள ஃபதேபூர் காவல் நிலைய எல்லைக்குள், கிராம மருத்துவரை மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ஜூராங் கிராமத்தை சேர்ந்த மருத்துவர் ஜிதேந்திர யாதவ், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் தாய்க்கு மருத்துவ உதவி வழங்கினார். இதனை விரும்பாத கிராம மக்கள் மருத்துவரை மரத்தில் கட்டி வைத்து கொடூரமான முறையில் ரத்தம் சொட்ட தாக்குதல் நடத்தியுள்ளனர். […]