ராஜராஜ சோழனின் 1,040வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நவம்பர்.1 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகுவிமரிசையாக 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 1040-வது சதய விழா வரும் […]

விவசாயிகள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காவிரி பாசன மாவட்டங்களில் அரும்பாடுபட்டு சாகுபடி செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படாதது குறித்து உழவர்கள் கதறி அழுது முறையிட்டாலும் கூட, கொள்முதலில் இன்று வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கொள்முதல் நிலையங்களுக்கு முன்பாக மழையில் நனைந்த நெல்லுடன் உழவர்கள் தவம் […]

தஞ்சையில் நவம்பர் 15ம் தேதி தண்ணீருக்காக மாநாடு நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். 2026 சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, ஐம்பூதங்களை அடிப்படையாகக் கொண்டு, நிலம், நீர்,வானம், நெருப்பு, காற்று மாநாடு […]